பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மெட்ரோ ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை!

தில்லி மெட்ரோ ரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். 

News image
Updated On :13 டிசம்பர் 2019, 9:43 am

தில்லி மெட்ரோ ரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். 

தில்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று உள்ளே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கிருந்த வாலிபர் ஒருவர் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்தவரது பெயர் பாரத்(33) என்றும் இன்று காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தினால் மெட்ரோ வயலட் லைனில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இருந்து காஷ்மீரி கேட் வரை சில மணி நேரங்கள் மெட்ரோ சேவையில் தாமதம் ஏற்பட்டதாகவும் தற்போது அப்பகுதியில் நிலைமை சீரடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.