நாட்டு மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன: அமித் ஷா குற்றச்சாட்டு!
குடியுரிமை திருத்தச் சட்ட விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றன என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.


குடியுரிமை திருத்தச் சட்ட விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றன என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில்,
"எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றன. சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குடியுரிமை ஏதேனும் பறிக்கப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த மசோதாவில் அதற்கான வழிவகை ஏதும் இல்லை.
இது நேரு - லியாகத் ஒப்பந்தத்தின் ஒரு அங்கம் என்பதை காங்கிரஸுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். வாக்கு வங்கி அரசியலுக்காக இது 70 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. எங்களுடைய அரசு இதை நிறைவேற்றி லட்சக்கணக்கான, கோடிக்கணக்கானவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...