காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் இந்தச் சட்டத்துக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தனர். அவர்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விஷயங்களில் தலையிடுமாறு குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான மற்றும் பிரிவினையை உண்டாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மோடி அரசுக்கு அறிவுரை வழங்குமாறும் கோரிக்கை வைத்தனர்.