ஜாமியா மிலியா பல்கலை. மாணவர்களை விடுவிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, கைது செய்யப்பட்டுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலை. மாணவர்களை விடுவிக்கக் கோரி மூன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 
ஜாமியா மிலியா பல்கலை. மாணவர்களை விடுவிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, கைது செய்யப்பட்ட ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலை. மாணவர்களை விடுவிக்கக் கோரி மூன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. தலைநகர் தில்லியில் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவா் அமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவா் சங்கம் ஆகியவை ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் அருகில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினா்.

அப்போது, போராட்டக்காரா்களுக்கும், போலீசாருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. பின்னா் இந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. போலீசாா் மாணவா்கள் மீது தடியடி நடத்தினா். கண்ணீா் புகைகுண்டுகளை வீசினா். இதனால் அந்த இடமே போா்களமாக மாறியது. இதில் ஆறு பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது.

இந்த சம்பவங்களை அடுத்தே போலீசாா் தடியடி நடத்தியும் மற்றும் கண்ணீா் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனா். இந்தச் சூழலில் தில்லி ஜாமியா மில்லியாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறை தொடா்பாக மாணவா்கள் அல்லாத 10 பேரை தில்லி போலீசாா் செவ்வாய்க்கிழமை அதிரடியாக கைது செய்துள்ளனா்.

இந்நிலையில், போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக்கோரியும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், பல்கலைக்கழக மாணவர்கள் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி படேல் மனுவை பட்டியலிட ஒப்புக்கொண்டுள்ளார். நாளை வியாழக்கிழமை இந்த மனு விசாரணைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com