ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலில் முன்னிலையில் இந்தியா
ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.


ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
'ரேன்சம்வேர் வைரஸ்' - கணினி யுகத்தை ஆட்டிப் படைக்கும் சைபர் ஆயுதம். உலகின் மிக மோசமான வைரஸ் மென்பொருள். நம் இணைய பயன்பாடுகளை முடக்கிவைத்துக்கொண்டு, பணம் கொடுத்துவிட்டு மீட்டுக்கொள் என்று பேரம் பேசும் கொள்ளைக்காரர்கள் உருவாக்கும் வைரஸ்தான் ரேன்சம்வேர்.
கடந்த ஆண்டு உலக அளவில் கணினிகளை முடக்கிய முக்கிய ரேன்சம்வேர்களாக அறியப்பட்டவை ரையுக், புர்கா, ஸ்டாப். இவை மூன்றுமே இந்தியாவில் கணினிகளைத் தாக்கி வணிகத்தை பெரிதும் பாதித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் ரையுக் 5.84% பாதிப்பையும், புர்கா 0.80% பாதிப்பையும், ஸ்டாப் 10.10% பாதிப்பையும் ஏற்படுத்தின.
ரையுக் கடந்த ஆண்டு முதலே உலக அளவில் கணினிகளை முடக்கி வரும் வைரஸாகக் கண்டறியப்பட்டாலும், தற்போது அவரை இது ஆக்டிவாக இருந்து வருகிறது.
லேட்டஸ்ட் செக்யூரிட்டி அப்டேட்டுகளை கணினிகளில் உடனுக்குடன் அப்டேட் செய்வதன் மூலம் இதுபோன்ற ரேன்சம்வேர் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...