முஸ்லீம் சமூகத்தினருக்கு எதிரான எந்த மசோதாவையும் ஆதரிக்க மாட்டோம்: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 

ஆந்திராவின் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தேசிய குடிமக்களின் பதிவேட்டை (என்.ஆர்.சி) ஆதரிக்காது என்று கூறியுள்ளது. 
முஸ்லீம் சமூகத்தினருக்கு எதிரான எந்த மசோதாவையும் ஆதரிக்க மாட்டோம்: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்ததற்காக பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களை எதிர்கொண்ட ஆந்திராவின் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தேசிய குடிமக்களின் பதிவேட்டை (என்.ஆர்.சி) ஆதரிக்காது என்று கூறியுள்ளது. 

மக்களவையில் 22 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இரண்டு உறுப்பினர்களும் உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. இதற்கு அந்த மாநிலத்தில் உள்ள முஸ்லீம் சமூகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்தாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போது நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன. 

இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், துணை முதல்வருமான அம்ஜத் பாஷா செய்தியாளர்களிடம் பேசும்போது, முஸ்லீம் சமூகத்தின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு மசோதாவையும் கட்சி எதிர்க்கும். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்கள் மீது அனுதாபம் காட்டுவதாகவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்க கட்சி முயற்சி எடுக்கும். தேசிய குடிமக்களின் பதிவேட்டை (என்.ஆர்.சி) கட்சி ஆதரிக்காது' என்று கூறியுள்ளார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com