தடையை மீறி தில்லி ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி; பதற்றம்

காவல்துறை தடையை மீறி, தில்லியின் ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
தில்லி ஜும்மா மசூதியில் பதற்றம்
தில்லி ஜும்மா மசூதியில் பதற்றம்


புது தில்லி: காவல்துறை தடையை மீறி, தில்லியின் ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

'அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுங்கள்' என்று எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியும், மூவர்ணக் கொடிகளை கையில் ஏந்தியும், ஏராளமானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜும்மா மசூதியின் முதல் நுழைவு வாயில் அருகே திரண்டிருக்கும் போராட்டக்காரர்கள், ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாகப் புறப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. ஏராளமான துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக இன்று காலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டுக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com