குடியுரிமைத் திருத்தச் சட்டம்: காங்கிரஸ் நாளை தர்னா போராட்டம்; சோனியா, ராகுல் பங்கேற்பு!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தில்லியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தர்னா போராட்டத்தில் ஈடுபடுகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம்: காங்கிரஸ் நாளை தர்னா போராட்டம்; சோனியா, ராகுல் பங்கேற்பு!


குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தில்லியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தர்னா போராட்டத்தில் ஈடுபடுகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் மக்கள் என போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி காணொலி காட்சி மூலம் நேற்று தெரிவித்தார். மேலும் பாஜக அரசு மக்களின் குரலுக்கு செவிசாய்க்க மறுக்கிறது எனவும் மக்களை முற்றிலுமாக புறக்கணிக்கிறது எனவும் மாணவர்கள், மக்கள் ஆகியோர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடுகிறது எனவும் விமரிசித்திருந்தார்.

இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டுக்கும் எதிராக தில்லி ராஜ்காட் பகுதியில் நாளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை காங்கிரஸ் கட்சி தர்னா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரும் இந்த தர்னா போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com