விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கட்டி வைத்து.. வாயில் சிறுநீர் கழித்து: காதலால் ஒடிஸா இளைஞருக்கு கொடூரம்

காதல் விவகாரத்தின் காரணமாக ஒடிஸா இளைஞர் ஒருவர் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தப்பட்டு, அவரது வாயில் சிறுநீர் கழிக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

News image
ஒடிஸா இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்
Updated On :22 டிசம்பர் 2019, 1:02 pm

IANS

புவனேஸ்வர்: காதல் விவகாரத்தின் காரணமாக ஒடிஸா இளைஞர் ஒருவர் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தப்பட்டு, அவரது வாயில் சிறுநீர் கழிக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

ஒடிஸா ஹுர்டா மாவட்டத்தில் உள்ள கைபதார் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழந்துள்ளது. கடந்த 18-ஆம் தேதியன்று பங்கிடா கிராமத்தைச் சேர்ந்த சௌம்ய ரஞ்சன் தாஸ் என்ற இளைஞரை,  கைபதாரைச் சேர்ந்த ராஜேந்திர புயான் மற்றும் காட்டியா பல்டாசிங் ஆகிய இருவரும் தென்னைமரமொன்றில் கட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

அவர்க ள் அவரை கேவலமான வார்த்தைகளால் திட்டியும் தொடர்ந்து அடித்தும் வந்துள்ளனர்.  இந்த கொடூரமானது சில மணி நேரங்களாகத் தொடர்ந்த போதும் ஊரார் யாரும் அதைத் தட்டிக் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக அதை தங்களது செல்போனை விடியோவாக எடுப்பதில் கவனம் செலுத்தினர்.           

ஒருகட்டத்தில் மிகவும் சோர்ந்து போன சௌம்ய ரஞ்சன் தாஸ்  தாகம் அதிகரித்துக் குடிநீர் கேட்டுக் கதறிய போது, இவர்கள் இருவரும் அவரது வாயில் சிறுநீர் கழித்துள்ளனர். இதையும் யாரும் தட்டிக் கேட்கவில்லை.

அப்போது எடுக்கப்பட்ட விடியோவானது சமுக வலைத்தளங்களால் வைரலாகப் பரவிய பிறகே காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளது. இந்தத் தகவலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் பிரதாப் ஸ்வைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முன்பகையே இந்தக் கொடூரத் தாக்குதலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.