திருத்தப்பட்டக் குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து வன்முறை சம்பவங்களும் நடைபெறுகின்றன. அதனைத் தடுக்க பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தில் இந்து மதத்தைச் சார்ந்த ஓம் ராஜ் சைனி என்ற இளைஞரும், அனஸ் மற்றும் சுலைமான் ஆகிய இரு இஸலாமிய இளைஞர்களும் பலியாகினர். இவர்கள் அனைவருமே நெஹ்தர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.