ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

10 ரூபாய் நாணய மறுப்பு: நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி அறிவிப்பு

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :31 ஜனவரி 2024, 1:44 pm

DIN

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சமீப காலமாக பல இடங்களில் 10 ரூபாய் நாணயங்கள் இனி செல்லுபடியாகாது என்ற வதந்தி பரவியதைத் தொடர்ந்து பலர் நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என்றும் இதனை வாங்க மறுப்பது குற்றம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

Story image

புழக்கத்தில் இருக்கும் அனைத்து 10 நாணயங்களும் செல்லும் என்று கூறிய ரிசர்வ் வங்கியின் செய்திக் குறிப்பில்  'ரிசர்வ் வங்கி அறிவிப்பின்றி ஒரு நாணயத்தை செல்லாததாகவோ, வாங்க மறுப்பதோ குற்றம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி 1906-ம் வருடத்திய நாணயச் சட்டத்தின்படி, இந்தப் பத்து ரூபாய் நாணயம் செல்லத்தக்கது என்றும், இந்த நாணயத்தை முடக்குவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறப்பட்டுள்ளது. 

Story image

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 ஏ-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.