ஹைதராபாத்: பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் அமைப்பான பஜ்ரங் தள் தீவிர எதிர்ப்பு நடவடிக்கையில் குதித்துள்ளது.
இந்தியாவில் காதலர் தினம் கொண்டாடப்படுவது, கலாசார சீரழிவு என்று வலியுறுத்தி வரும் பஜ்ரங் தள், ஆண்டு தோறும் காதலர் தினக் கொண்டாட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில், பிப்ரவரி 14ம் தேதி, காதலர்கள் பூங்காக்களில் அத்துமீறிய செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால் அன்றைய தினம் பூங்காக்களை மூடுமாறு காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கும் சென்று ராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங்கின் உறுப்பினர்கள் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
காதல் என்பது ஏதோ ஒரே ஒரு நாளில் கொண்டாடப்படும் விஷயம் அல்ல என்பதையும், காதலர் தினம் கொண்டாடுவது இந்திய கலாசாரத்துக்கு உகந்தது அல்ல என்பதையும் அவர்கள் எடுத்துரைத்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.: நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த ரூ.4 லட்ச பணம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

சர்தார் - 2 என்ன ஆனது?
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


