மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

அரசியல் துறவறம் மேற்கொள்ளத் தயார்.. ஒரு அரசியல்வாதியின் ஸ்டேட்மென்ட்

மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விடியோ உண்மையானது என்று நிரூபித்தால் அரசியலில் துறவறம் செல்லத் தயார் என்று கர்நாடக பாஜக தலைவர் கூறியுள்ளார்.

News image
Updated On :8 பிப்ரவரி 2019, 9:38 am

பெங்களூரு: மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விடியோ உண்மையானது என்று நிரூபித்தால் அரசியலில் துறவறம் செல்லத் தயார் என்று கர்நாடக பாஜக தலைவர் கூறியுள்ளார்.

இன்று கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏவின் மகனிடம் பேரம் பேசும் விடியோவையும் குமாரசாமி வெளியிட்டார்.

இது குறித்து பதிலளித்த எடியூரப்பா, குமாரசாமியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று கூறியிருப்பதோடு, ஒருவேளை இந்த ஆடியோ உண்மையானது என்று நிரூபித்தால் நான் அரசியலில் இருந்தே துறவறம் செல்கிறேன் என்று குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.