கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ சத்யாஜித் பிஸ்வாஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கிருஷ்நகர் சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏவான சத்யாஜித் பிஸ்வாஸ், நாடியா மாவட்டம், புல்பாரி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் சனிக்கிழமை மாலை பங்கேற்றார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து, அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சத்யாஜித் பிஸ்வாஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த கொலை விவகாரத்தில் கடமை தவறியதாக ஹன்ஸ்காளி காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


