ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவையும், அங்கு வசிக்கும் மக்களுக்கு சிறப்புக் குடியுரிமை வழங்கும் 35ஏ சட்டப்பிரிவையும் நீக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது சட்டப்பிரிவின்படி ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு சட்டங்களை இயற்றும் சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. இந்தச் சட்டப்பிரிவின் மூலமே, ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்குச் சிறப்பு குடியுரிமை வழங்கும் 35ஏ சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது. இவ்விரு சட்டங்களையும் நீக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீர் பிரிவினைவாதக் குழுக்களின் கூட்டு ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்களான சையது அலி கிலானி, மிர்வாய்ஸ் ஒமர் ஃபரூக் மற்றும் யாசின் மாலிக் ஆகியோர் இரண்டு நாள்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து, முதல்நாளான புதன்கிழமை ஸ்ரீநகரில் கடைகள், பெட்ரோல் நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தன. வாகன போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. ஓரிரு வாகனங்கள் மட்டுமே சாலையில் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிவினைவாத குழுக்களின் கூட்டு ஒருங்கிணப்புகுழு சார்பில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டரீதியாக நடைபெற்று வரும் இந்த வழக்குகள் என்பது சவால்கள் நிறைந்ததாகவும், மிகவும் சிக்கலான பிரச்னையாகவும் மாறியுள்ளது என்றும் அந்த பதாகைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டு ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசால் விடுக்கப்படும் ஒவ்வொரு சவால்களையும் எதிர்கொள்ள ஜம்மு காஷ்மீர் மக்கள் தயாராகவே உள்ளனர். 1927ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மாநில சட்டங்களின் அடிப்படையிலான விதிகளையே (சட்டப்பிரிவு 35-ஏ) பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது, அதற்கு எதிராக மத்திய அரசு தங்களது முகவர்கள் மூலமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்த சலுகையை பறிக்க நினைக்கிறது.
சிறப்பு அந்தஸ்து சலுகைக்கு எதிராக பாதகமான நிலைபாட்டை நீதிமன்றங்களின் வாயிலாக மக்களுக்கு எதிராக மேற்கொள்ள நினைத்தால், ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஒருங்கிணைந்து மாபெரும் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மிக இளம் வயது மேயர்! பிரிட்டன் வரலாற்றில் இடம்பெற்ற இந்திய வம்சாவளி இளைஞர்!!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லைக்காளியம்மன் கோயில் தெப்போற்சவம்!
பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2-வது முறை உயர்வு!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

