நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இந்தியச் சந்தைக்கு வருகிறது ஆஸ்திரேலிய வால்நட்!

ஆஸ்திரேலியாவில் இருந்து வால்நட் (அக்ரூட்) பருப்பை இறக்குமதி செய்வது தொடர்பாக இந்தியா விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ள இருக்கிறது.

Updated On :14 பிப்ரவரி 2019, 1:03 am IST


ஆஸ்திரேலியாவில் இருந்து வால்நட் (அக்ரூட்) பருப்பை இறக்குமதி செய்வது தொடர்பாக இந்தியா விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ள இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் அந்த வகை பருப்பின் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மிகப்பெரிய சந்தையாக உள்ள இந்தியாவில் தங்கள் வேளாண்மைப் பொருள் ஒன்றுக்கு அனுமதி கிடைப்பது குறித்து ஆஸ்திரேலியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய வேளாண்மைத் துறை அமைச்சர் டேவிட் லிட்டில்பிரெளட் கூறியதாவது:
கடந்த 6-ஆம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இறக்குமதிக்கு உள்ள விதிகள் குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து தூய்மையான, பசுமையான வால்நட் பருப்புகள் விரைவில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. தரமான, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட விவசாயப் பொருள்களுக்கு இந்தியாவில் எப்போதும் வரவேற்பு உள்ளது. இந்தியாவில் 140 கோடி மக்கள் உள்ளனர். இது ஆஸ்திரேலியாவில் இருக்கும் மக்களைவிட 50 மடங்கு அதிகம். எனவே, ஆஸ்திரேலிய வால்நட்டுக்கு இந்தியாவில் மிகப்பெரிய சந்தை உள்ளது. ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவில் இருந்து அதிக அளவில் பாதாம் பருப்பு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.