ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஏற்றிய கறுப்புக் கொடி 

புதுச்சேரி துணை நிலை ஆளுநரான கிரண் பேடிக்கு எதிரான தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக,  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது வீட்டில் கறுப்புக் கொடி ஏற்றியுள்ளார்.

News image
Updated On :17 பிப்ரவரி 2019, 6:00 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநரான கிரண் பேடிக்கு எதிரான தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக,  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது வீட்டில் கறுப்புக் கொடி ஏற்றியுள்ளார்.

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை எதிரே நடத்தி வரும் தர்னா 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுவையில் மக்கள் நலத் திட்டங்களை ஆளுநர் கிரண் பேடி முடக்குகிறார். தொடர்ந்து, மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தில் தலையிடுகிறார். மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் அவர் உடனே கையெழுத்திட வேண்டும்.

கிரண் பேடியைத் திரும்பப் பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.ஆளுநர் கிரண் பேடி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. போராட்டம் காரணமாக அரசுப் பணிகள் பாதிக்கப்படவில்லை.  இனியும் கிரண் பேடி ஒரு நிமிடம்கூட இங்கு பதவியில் நீடிக்கக் கூடாது என்பதுதான் புதுவை மக்களின் ஒட்டுமொத்த எண்ணமாக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அத்துடன் பொதுமக்கள் பிரச்சனைகள் குறித்து பொதுமேடையில் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என முதல்வர் நாராயணசாமிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சவால் விடுத்திருந்தார். அதனை ஏற்று புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன், எப்போது வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார் என்றும்   முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கிரண் பேடிக்கு எதிரான தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக,  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது வீட்டில் கறுப்புக் கொடி ஏற்றியுள்ளார். 

அவரைத்  தொடர்ந்து புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தங்களது வீடுகளில் கருப்பு கொடி எற்றியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.