ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

புல்வாமா தாக்குதல் எதிரொலி : காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு ரத்து 

புல்வாமா கோர தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக  காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :17 பிப்ரவரி 2019, 7:03 am

DIN

ஜம்மு: புல்வாமா கோர தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக  காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வியாழன் அன்று நிகழ்ந்த புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டில் நிலவி வரும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து, உளவுத்துறை மற்றும் காவல்துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை காலை ஆலோசனை நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக ஆளுநர் மாளிகையில் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் உள்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் புல்வாமா கோர தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக  காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்து மத்திய அரசு ஞாயிறன்று உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.