தில்லி அக்ஷர்தாம் கோவில் அருகே போலீஸ் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு
தில்லியில் உள்ள புகழ்பெற்ற அக்ஷர்தாம் கோவில் அருகே போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


புது தில்லி: தில்லியில் உள்ள புகழ்பெற்ற அக்ஷர்தாம் கோவில் அருகே போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லியில் உள்ள புகழ்பெற்ற அக்ஷர்தாம் கோவில் அருகேயுள்ள பாண்டவ நகர் பகுதியில் போலீசார் வியாழனன்று தங்களது வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயம் அடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த நபரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...