2019 மக்களவைத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியோடு எந்தக் கூட்டணியும் கிடையாது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
"2019 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக போட்டியிட்டால் தில்லியில் பாஜகவை எளிதில் வீழ்த்திவிடலாம். ஆனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையிலான கூட்டணி அமையவில்லை.
எனினும் பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி கடுமையான நெருக்கடியை கொடுக்கும்.
காங்கிரஸ் கட்சி தில்லியில் ஆம் ஆத்மியை வலுவிழக்கச் செய்கிறது. உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜவாதி கூட்டணியை வலுவிழக்கச் செய்கிறது. இதே நிலை தான் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கும் நடக்கிறது" என்றார்.
முன்னதாக, தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்ஷி்த், "வருகின்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தில்லியில் தனித்துப் போட்டியிட்டு, 7 இடங்களிலும் வெற்றி பெறும்" என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு!

அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

