புதுதில்லி: தகவல், தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு முன்பு ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே திங்களன்று ஆஜராகவில்லை.
தேசப்பற்று சார்ந்த பதிவுகள் மீது பாகுபாடு பார்க்கப்படுவதாக ட்விட்டர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க அந்த நிறுவனத்துக்கு பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் தலைமையிலான தகவல், தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு கடந்த 1-ஆம் தேதி மின்னஞ்சல் வாயிலாகக் கடிதம் அனுப்பியிருந்தது. அதில், பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு சுட்டுரை நிறுவன பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பின்னர், அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் பங்கேற்பதற்கு வசதியாக, பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்க அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சே மறுத்துவிட்டார். அவருக்கு பதிலாக ட்விட்டரின் நிர்வகிக்கும் இந்திய அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இவர்களிடன் விவாதிக்க நாடாளுமன்றக் குழு மறுத்துவிட்டது. மேலும், அவர்கள் ஆலோசனை அறைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து, ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சே 25-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆனால் திங்களன்று அவருக்கு பதிலாக தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன்பு, ட்விட்டர் நிறுவனத்தின் துணைத்தலைவர் கோலின் குரோவெல் ஆஜரானார்.
இதனையடுத்து நிலைக்குழு சார்பில் கேட்கப்பட்டுள்ள பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு பதிலளிக்க 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் உள்ளிட்ட நிறுவன மூத்த அதிகாரிகளுக்கு மார்ச் 6-ம் தேதி ஆஜராக நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


