மேகாலய மாநிலத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சுரங்க விபத்தில் சிக்கிய 15 தொழிலாளர்களில், மேலும் 2 நபர்களின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்துடன், அந்த விபத்துப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 4 ஆகியுள்ளது.
மேகாலயத்தின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் சிறிய அளவிலான சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் 15 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தச் சுரங்கத்தில் மழை வெள்ளம் புகுந்ததில் அனைவரும் மூழ்கியதாக அஞ்சப்படுகிறது.
அதைத் தொடர்ந்து அவர்களை மீட்க பெருமளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை. அவர்களை உயிருடன் மீட்க வாய்ப்பில்லை என்று மீட்புக் குழு அறிவித்தது. தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணியில் கடந்த ஜனவரி மாதம் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்த சம்பவத்தில் மேலும் இரு சடலங்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாக மீட்பு குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்தக் குழுவின் செய்தித் தொடர்பாளர் சுசன்கி கூறியதாவது:
உயிரிழந்தவர்களில் 3-ஆவது நபரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. கடற்படை வீரர்கள் குழு, நீருக்கடியில் ரிமோட் மூலம் இயக்கக் கூடிய வாகனம் ஒன்றை பயன்படுத்தி அதை மீட்க முயன்றனர். எனினும், மீட்பு முயற்சியில் அந்த சடலம் மோசமான வகையில் சிதைந்துபோக வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், கடற்படையினர்
4-ஆவது சடலத்தை திங்கள்கிழமை கண்டறிந்துள்ளனர். அந்த சடலம் 230 அடி ஆழத்தில், 3-ஆவது சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதை சிதைவடையாமல் மீட்கும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர் என்று சுசன்கி கூறினார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு: சுரங்கத்தில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றும் பணியில் அதிக சக்திவாய்ந்த பம்புகளை பயன்படுத்த மேகாலய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


