புது தில்லி: புல்வாமா தாக்குலுக்குப் பிறகு பாகிஸ்தானில் இரண்டு தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களிடையே 'சீக்ரட் மீட்டிங்' நடைபெற்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதியன்று சி.ஆர்.பி.எப் வீரர்களின் வாகனங்களின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 40 வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவமானது இந்திய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த கொடூர தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு திட்டமிட்டு நடத்தியது தெரிய வந்தது. தற்போது தேசிய விசாரணை ஆணையம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் புல்வாமா தாக்குலுக்குப் பிறகு பாகிஸ்தானில் இரண்டு தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களிடையே 'சீக்ரட் மீட்டிங்' நடைபெற்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் மற்றும் மற்றொரு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைவரான சையத் சலாஹுதீன் இருவரும் இஸ்லாமாபாத் அருகே ரகசிய இடத்தில சந்தித்து பேசிய தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் சம்பவம் நடந்து முடிந்த இரண்டு நாட்களிலேயே 16 மற்றும் 21 ஆகிய இரு தேதிகளில் இவர்களது சந்திப் பு நடந்துள்ளது.
இந்த சந்திப்பின் போது இரண்டு அமைப்புகளின் வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் செயல்பாடுகளை தீவிரப்படுத்துதல் தொடர்பாக அமைந்திருக்கலாம் என்று, பாதுகாப்பு துறை வல்லுநரான வர்மா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின் கோபுரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

தோ்தல் புறக்கணிப்பு அறிவித்த போடி மலை கிராமங்களில் வாக்குப் பதிவு அதிகரிப்பு!

கோபத்தை, சோகத்தைச் சொல்ல தமிழ் மொழி போல வேறு மொழி கை கொடுக்காது: பேராசிரியா் கு. ஞானசம்பந்தன்

விஷம் குடித்தவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


