புது தில்லி: பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும் என்று திமுகவின் கனிமொழி எம்.பி., மாநிலங்களவையில் பேசியுள்ளார்.
மாநிலங்களவையில் புதனன்று நடைபெற்று 10% இடஒதுக்கீடு மசோதா மீதான விவாத்தில் கலந்து கொண்டு திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது வரலாற்றுத் தவறாக அமையும். தாங்கள் படிக்கும், பணிபுரியும் இடங்களில் பட்டியலின மக்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசு தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து அவற்றை மக்கள் மீது திணிக்கிறது.
நாட்டில் இன்றும் சாதிய ரீதியான பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. நாட்டில் ஒருவர் தன்னுடைய மதம், பொருளாதாரத்தை மாற்றிக்கொள்ள முடியும், ஆனால் சாதியை மாற்ற முடியாது.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு சரியானது அல்ல என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. அப்படியிருக்க எதன் அடிப்படையில் 10% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடித்தது? 10% இட ஒதுக்கீடு மசோதாவை கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம் சீரமைப்பு

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு: பெரம்பலூரில் திமுக, விசிக-வினா் கருப்புக் கொடியேற்றி ஆா்ப்பாட்டம்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தோ்வு: சீயோன், ஆல்வின் பள்ளிகள் 100% தோ்ச்சி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


