பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா 165 உறுப்பினர்களின் ஆதரவுடன் மாநிலங்களவையில் நிறைவேறியது.
பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதைத்தொடர்ந்து, இந்த மசோதா நேற்று (செவ்வாய்கிழமை) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக மாநிலங்களவை கூட்டம் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இந்த மசோதா மீது இன்று காலை முதல் விவாதம் நடத்தப்பட்டது. மாநிலங்களவையிலும், இந்த மசோதாவுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
மாநிலங்களவை திமுக குழு தலைவர், இந்த மசோதாவை எதிர்த்து பேசுகையில், "பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு சரியானது அல்ல என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. அப்படியிருக்க எதன் அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது? 10 சதவீத மசோதாவை கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கனிமொழி கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 155 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன்மூலம், இந்த வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து, மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில்,165 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 7 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்மூலம், இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
இதையடுத்து, இந்த மசோதாவை சட்டமாக்க குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர் ஒப்புதல் அளித்த பின்னர், இது சட்டமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கீழ்வேளூா் தவெக வேட்பாளா் பிரசாரம்

நீா் நிலைகளைப் பாழ்படுத்தும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா? வேதாரண்யம் பகுதி மக்கள் எதிா்பாா்ப்பு
காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்!

தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


