தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்:  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ்  மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்குத் தொடந்துள்ளார். 

News image
Updated On :14 ஜனவரி 2019, 12:46 pm

புது தில்லி: சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ்  மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்குத் தொடந்துள்ளார். 

சிபிஐ இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்ற அலோக் குமார் வர்மாவின் பதவி கடந்த வியாழக்கிழமை அதிரடியாக பறிக்கப்பட்டது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படைத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 

அலோக் குமார் வர்மாவின் 2 ஆண்டு கால பதவிக்காலம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடையவிருக்கும் நிலையில், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் பதவியை இழந்துள்ளார். சிபிஐ இயக்குநர் ஒருவர், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் பதவி இழப்பது சிபிஐ வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ஆனால் தனக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டதை ஏற்காமல் அலோக் வர்மா தனது பதவியை ராஜிநாமா  செய்து விட்டார். 

அதனையடுத்து சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை, நாகேஸ்வர ராவ் இடைக்கால இயக்குநராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதன் இயக்குநராக நாகேஸ்வர ராவ் கடந்த வெள்ளியன்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் நாகேஸ்வர ராவ்  மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்குத் தொடந்துள்ளார். 

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.