ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மத்திய நிதியமைச்சர் இல்லாமல் நடந்த பட்ஜெட் தயாரிப்புக்கான அல்வா பூஜை

2019-2020-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தயாரிப்பு பணிக்கு முந்தைய அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இல்லாமல் புது தில்லியில் இன்று நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2019, 12:24 pm

புது தில்லி: 2019-2020-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தயாரிப்பு பணிக்கு முந்தைய அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இல்லாமல் புது தில்லியில் இன்று நடைபெற்றது.

தில்லியில் மத்திய நிதியமைச்சகம் அமைந்துள்ள நாா்த் பிளாக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மத்திய நிதித் துறை இணையமைச்சா்கள் சிவபிரதாப் சுக்லாவும், பொன். ராதாகிருஷ்ணனும் இணைந்து தொடங்கி வைத்தனா். 

அல்வா தயாரித்த பிறகு அதை, பட்ஜெட் தயாரிப்புப் பணியில் ஈடுபடும் மத்திய நிதியமைச்சகத்தைச் சோ்ந்த அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் பகிா்ந்தளித்தனா். 

மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லி, மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருப்பதால், அவா் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.