2022-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள 22,000 வேளாண் பொருள் சந்தைகளை மின்னணு முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
தேசிய மின்னணு வேளாண்மை சந்தை எனப்படும் இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே 585 சந்தைகள் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
மும்ûபையில் இந்திய பயிர் காப்பு கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
வேளாண் துறையை மேம்படுத்தவும், விவசாயிகள் மற்றும் அத்துறையைச் சார்ந்த தொழிலில் உள்ள மற்றவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வேளாண் உற்பத்திக்கான செலவைக் குறைப்பது, விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பது, வேளாண் உற்பத்திப் பொருள்கள் வீணாகாமல் தடுப்பது, விவசாயிகளுக்கு மாற்று வழிகளில் வருமானத்துக்கு வழி வகை செய்வது, வேளாண் உற்பத்திப் பொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது போன்றவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
வேளாண் துறை பல்வேறு சவால்களை சந்தித்து வருவது உண்மைதான். இதனை வெற்றி
கரமாக எதிர்கொள்ள அரசு முழுவீச்சில் பணியாற்றி வருகிறது. விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அமையும். 2022-ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்கு.
அதனை மையமாகக் கொண்டு பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்படும்.
வேளாண் பொருள் விற்பனையை ஒருங்கிணைக்கும் நோக்கில் 2022-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள 22,000 வேளாண் பொருள் சந்தைகளும் மின்னணு முறையில் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் எந்தப் பொருள் எங்கு இருப்பு உள்ளது? எங்கு தேவை அதிகம் உள்ளது? என்பது போன்ற தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கும் என்றார் ராதா மோகன் சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத்; குஜராத்தும் இடம் பிடித்தது: வெளியேறும் நிலையில் சென்னை

திராவிட மாடல் திட்டங்கள் மூலம் திமுகவும் ஆட்சியில் இருக்கிறது: ஸ்டாலின்

அவிநாசியில் 2-ஆம் குடிநீா்த் திட்டத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும்: எம்எல்ஏ கமலி

கொடைக்கானலில் குதிரை சவாரிக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
