இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆர்எஸ்எஸ் பிரமுகர் படுகொலை

மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Updated On :24 ஜனவரி 2019, 3:01 am IST


மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அந்த மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா கூறியதாவது: ஹிம்மத் படிதார் (36) என்ற அந்த நபர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷிவ்பூர் மண்டல முன்னாள் தலைவர் ஆவார். இவர், காமத் கிராமத்திலுள்ள வயல்வெளிக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளார். அதன் பிறகு, வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அவரைத் தேடத் தொடங்கினர். அப்போது, வயல்வெளியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. 
அவரது முகமும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் பிரதீப் சர்மா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.