ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு?: மஹாராஷ்டிராவில் ஒன்பது பேர் கைது
மும்பை: சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டின் பேரில், மஹாராஷ்டிராவில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், சிலரை மஹாராஷ்ட்ரா பயங்கரவாத தடுப்பு படையினர் (ஏடிஎஸ்) சில நாட்களாக கண்காணித்து வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக அம்ருத் நகர், கவுசா, மோடி பக், அல்மாஸ் காலனி ஆகிய இடங்களில் செவ்வாய் இரவு நடத்திய சோதனைக்கு பிறகு, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையின் போது ரசாயனங்கள், ஆசிட் பாட்டில்கள், கூர்மையான ஆயுதங்கள், மொபைல் போன்கள், ஹார்டு டிஸ்குகள், சிம் கார்டுகள் ஆகியவற்றை காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் சதித் திட்டத்தை செயல்படுத்த தயார் நிலையில் உள்ளார்கள் என்ற ரகசிய தகவல் கிடைத்தவுடன் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றச்சதி, தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.