தேசப்பிதா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி (ஜனவரி 30) மும்பையில் இயங்கி வரும் அறக்கட்டளை சார்பில் காந்தியடிகள் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆச்சார்ய வினோபா பாவேவின் புத்தகங்கள் பாதி விலையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மும்பையின் டார்தியோ பகுதியில் உள்ள காந்தி புத்தக நிலையத்திலும், ஹுதாத்மா செளக்கிலும் வரும் 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரையிலும் மும்பை சர்வோதயா மண்டல் (எம்எஸ்எம்) பகுதியிலும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
மகாத்மாவின் 71ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது மற்றும் வினோபா பாவேவின் ஆங்கிலம், மராத்தி, ஹிந்தி, குஜராத்தி மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 200 விதமான புத்தகங்கள் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் வைக்கப்படவுள்ளதாக எம்எஸ்எம் மண்டல நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
பூமிதான இயக்கத்தின் தலைவரான வினோபா பாவே தனது பூமிதான அந்தோலன் அறக்கட்டளை மூலமாக, காந்தியின் எண்ணங்களையும், கருத்துக்களையும், கருத்தரங்குகள், கருத்துப்பட்டறை, பொதுக்கூட்டங்கள் மற்றும் இளைஞர் முகாம்கள் மூலமாக 1952ஆம் ஆண்டு முதல் பரப்பி வந்தார்.
காந்தியடிகளின் சுயசரிதை புத்தகங்கள் ரூ.25க்கே விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மகாத்மா காந்தி தேர்ந்தெடுத்து செய்த பணிகள் என்ற 1872 பக்கங்களை கொண்ட நூல் ரூ.300க்கும், வினோபா பாவேயின் கீதையை பற்றி பேசுங்கள் என்ற நூல் ரு.50க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு காந்தியின் புத்தகங்கள் 6 நாள்களில் ரூ.4.30 லட்சம் மதிப்பில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலின், இபிஎஸ் இணைவார்கள் : ஆதவ் அர்ஜுனா
வரி அமைப்பில் மாற்றம்? பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் அரசு கருத்துகேட்பு: நிர்மலா சீதாராமன்
நீட் மறுதேர்வு: மாநில முதல்வர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்!






