டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விடியோகான் கடன் விவகாரம்: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சந்தா கோச்சார், கணவர் மீது வழக்குப் பதிவு

விடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கி மோசடியில் ஈடுபட்டப் புகாரில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் மேலாண் இயக்குநர் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2019, 11:59 am

DIN


விடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கி மோசடியில் ஈடுபட்டப் புகாரில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் மேலாண் இயக்குநர் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடியோகான் அலுவலகம், சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நிர்வகித்து வந்த நுபவர் நிறுவனம் - மும்பை உட்பட 4 இடங்களில் சிபிஐ சோதனை நடத்திய நிலையில், விடியோ கான் நிறுவனர் வேணுகோபால், சந்தா கோச்சார், தீபக் கோச்சார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குநராக இருந்த சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் அங்கம் வகித்த விடியோகான் நிறுவனத்துக்கு 2012ம் ஆண்டு விதிகளை மீறி ரூ.3,250 கோடி அளவுக்குக் கடன் வழங்கியிருந்தார்.

இந்த கடன் வழங்கப்பட்ட சில மாதங்களில் விடியோகான் பிரமோட்டர் வேணுகோபால் தூத் என்பவர், சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவரால் நிர்வகிக்கப்பட்டு வந்த நுபவர் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கடன் மோசடி வெளிச்சத்துக்கு வந்ததும், 2009ம் ஆண்டு முதல் ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குநராக இருந்த சந்தா கோச்சார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவி விலகினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.