நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

குடியரசு தினம்: அட்டாரி - வாகா எல்லையில் இனிப்புப் பரிமாற்றம்

இந்தியாவின் 70வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே இனிப்புப் பரிமாற்றம் நடைபெற்றது.

News image
Updated On :26 ஜனவரி 2019, 6:16 am


இந்தியாவின் 70வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே இனிப்புப் பரிமாற்றம் நடைபெற்றது.

முன்னதாக, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்திய தேசத்தைக் காக்கும் வீரர்கள், 70வது குடியரசு தினத்தை சக வீரர்களுடன் இனிப்புப் பரிமாறிக் கொண்டாடினர்.

இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளான அட்டாரி - வாகா  எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி, பாகிஸ்தான் பாதுகாப்புப் படை அதிகாரியிடம் இனிப்பு வழங்க, பாகிஸ்தான் தரப்பிலும் இந்தியாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் இந்திய சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது வாகா - அட்டாரி எல்லையில் இனிப்புப் பரிமாற்றம் நடைபெறுவது வழக்கம் என்றாலும், சில சமயங்களில், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தும் போது, இனிப்புப் பரிமாற்றத்தை இந்தியா நிறுத்தி வைப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.