புது தில்லி: புது தில்லியில் இன்று 11,000 புதிய வகுப்பறைகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அடிக்கல்லை நாட்டி வைத்துப் பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது அரசையும் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
நிகழ்ச்சியில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசுகையில், எதை நீங்கள் தேர்வு செய்வீர்கள்? தேச பக்தியையா அல்லது மோடி பக்தியையா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், உங்கள் குழந்தைகளை உங்களுக்கு பிடிக்காது என்றால் நீங்கள் மோடிக்கு வாக்களிக்கலாம் என்றும் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
இங்கே இந்த வகுப்பறைகளைக் கட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நானும், துணை முதல்வர் மணீஷும் ஒவ்வொரு விஷயத்துக்கும் போராடியுள்ளோம். உங்கள் குழந்தைகளை நீங்கள் விரும்புவதாக இருந்தால் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள். வாக்களிக்கச் செல்லும் போது ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், கடந்த முறை பாஜகவுக்கு வாக்களித்ததால், நமது அனைத்துக் கோப்புகளும் திட்டங்களும் மத்திய அரசால் தடை செய்யப்பட்டதை எண்ணிப் பாருங்கள் என்று கூறினார் அரவிந்த் கேஜ்ரிவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


