சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்  என்.எஸ்.விஸ்வநாதனின் பதவிக்காலம் நீட்டிப்பு 

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்  என்.எஸ்.விஸ்வநாதனின் பதவிக்காலத்தை ஓராண்டு  நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2019, 2:29 pm

புது தில்லி: ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்  என்.எஸ்.விஸ்வநாதனின் பதவிக்காலத்தை ஓராண்டு  நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்ததாஸ் பதவி வகிக்கிறார். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த விரால் ஆச்சாரியா கடந்த மாதம் 24-ம் தேதி  தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்  என்.எஸ்.விஸ்வநாதனின் பதவிக்காலத்தை ஓராண்டு  நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியில் என்.எஸ்.விஸ்வநாதன் தவிர்த்து கணுங்கோ மற்றும் ஜெயின் ஆகியோர்  துணை ஆளுநர்களாக இருக்கிறார்கள்.  

வரும் 3-ஆம் தேதியோடு முடிவடைவதாக இருந்த விஸ்வநாதனின் பதவிக்காலம் தற்போது மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.