பேருந்து - சரக்கு லாரி நேருக்கு நேர் மோதல்: கர்நாடகாவில் 12 பேர் பலி
கர்நாடக மாநிலத்தில் தனியார் பேருந்தும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியானர்கள்.


பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தனியார் பேருந்தும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியானர்கள்.
கர்நாடகாவின் சிக்கபலாப்பூர் மாவட்டத்திலுள்ளது முருகமல்லா கிராமம். இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் தனியார் பேருந்து ஒன்றும், சரக்கு லாரியும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன . இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயமடைந்த பேருந்துப் பயணிகள் 10 பேர் அருகில் உள்ள சிந்தாமணி நகரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...