தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

பதில் சொல்லுங்க; இல்லை என்றால் தடை தான்: மீண்டும் சர்ச்சையில் டிக் டாக் 

மத்திய அரசு அனுப்பியுள்ள 24 கேள்விகள் அடங்கிய பட்டியலுக்கு ஜூலை 22-க்குள் பதில் அளிக்கவில்லை என்றால் தடை விதிக்கப்படும் என்று டிக் டாக் மற்றும் ஹலோ செயலிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :

புது தில்லி: மத்திய அரசு அனுப்பியுள்ள 24 கேள்விகள் அடங்கிய பட்டியலுக்கு ஜூலை 22-க்குள் பதில் அளிக்கவில்லை என்றால் தடை விதிக்கப்படும் என்று டிக் டாக் மற்றும் ஹலோ செயலிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் விடியோ பகிர்வதற்கு உதவும் செயலிகளில்  டிக் டாக் மற்றும் ஹலோ ஆகிய இரண்டும் புகழ்பெற்றவையாகும். ஆனால் இந்த செயலிகள் தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்பான ஸ்வதேஷி ஜாக்ரன மஞ்ச் சமீபத்தில் பிரதமர் மோடியிடம் புகார் செய்திருந்தது.

இதையடுத்து இந்த இரு செயலிகளுக்கும் 24 கேள்விகள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதற்கு ஜூலை 22-க்குள் பதில் அளிக்கவில்லை என்றால் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

அத்துடன் இந்தியப் பயனாளர்கள் குறித்த தகவல்களை வெளிநாடுகளுக்கோ அல்லது மூன்றாம் தரப்பினருக்கோ அளிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பொய்யான தகவல்களை பரப்பக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் அரசின் நடவடிக்கைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குவதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.