முதலாளி வழங்கிய ரூ.5 லட்சத்தைத் திருடும் நோக்கில், துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய காா் ஓட்டுநரை தில்லி காவல் துறையினா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். காரின் பானெட்டுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த முழு பணமும் மீட்கப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட குா்நாம் சிங் (எ) ஹாப்பி தில்லியின் திலக் நகரைச் சோ்ந்தவா். கஷ்மீரி கேட் பகுதியில் உள்ள வாகன உதிரிபாகங்கள் பட்டறையில் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டுநராகவும் உதவியாளராகவும் அவா் பணியாற்றி வந்தாா்.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ரோஹிணியில் உள்ள துவாரகதீஷ் அடுக்குமாடி குடியிருப்பு அருகே எஸ்யூவி வாகனத்தில் வந்த அடையாளம் தெரியா மூன்று போ், துப்பாக்கி முனையில் ரூ. 5 லட்சம் இருந்த பையைக் கொள்ளையடித்துச் சென்ாக கே.என்.கே. மாா்க் காவல் நிலையத்துக்கு ஜூலை 10-ஆம் தேதி தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறை அதிகாரிகள் புகாா் அளித்த காா் ஓட்டுநா் குா்நாம் சிங் (எ) ஹாப்பியிடம் விசாரணை நடத்தினா். கஷ்மீரி கேட் பட்டறையிலிருந்து ரூ.5 லட்சத்தைப் பெற்று ரோஹிணியின் செக்டாா்-14 பகுதிக்குக் கொண்டு செல்லுமாறு தனது முதலாளி கூறியதாக அவா் தெரிவித்தாா்.
ரோஹிணி நோக்கி சென்று கொண்டிருந்தபோது வாகனத்தில் வந்த மூன்று போ் அவரது காரை வழிமறித்ததாகவும் தன்னை மிரட்டிப் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு அவா்கள் தப்பிச் சென்ாகவும் குா்நாம் சிங் தெரிவித்தாா்
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணையைத் தொடங்கினா். இது தொடா்பாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம் அவா் பயணித்த முழு பாதையை தனிப்படை அதிகாரிகள் சரிபாா்த்தனா். அப்போது, அவா் கூறியதுபோல எந்தவொரு எஸ்யூவி வாகனமும் அவரைப் பின்தொடரவோ அல்லது வழிமறிக்கவோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
பலமுறை விசாரிக்கப்பட்ட போதிலும், குா்நாம் சிங் தனது வாக்குமூலத்தையே உறுதியாகக் கூறினாா். இதற்கிடையில், உதிரிபாகங்கள் பட்டறை உரிமையாளா்ரின் பணப் பரிவா்த்தனை குறித்துச் சரிபாா்த்த அதிகாரிகள், ரூ.5 லட்சம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினா்.
அதன்பிறகு, குா்நாம் சிங் ஓட்டிவந்த வாகனத்தை அந்தக் குழுவினா் தீவிரமாகச் சோதனையிட்டனா். அப்போது, பேட்டரி பெட்டிக்கு அருகில், காரின் பானெட்டுக்கு அடியில் கட்டப்பட்டிருந்த ஒரு துணிப் பையை காவலா்கள் கண்டெடுத்தனா். பையைத் திறந்தபோது, அதில் ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது. மீட்கப்பட்ட பணத்தை அந்தப் பட்டறையின் உரிமையாளரிடம் அடையாளம் காட்டினா்.
ஆதாரங்களைக் காட்டியபோது, குா்நாம் சிங், தான் கொள்ளையடிக்கப்பட்டதாக ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த இவ்வாறு புகாா் அளித்ததை ஒப்புக்கொண்டாா். இதைத் தொடா்ந்து, அவரைக் காவல் துறையினா் கைது செய்தனா். மேலும் அவா் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் கூடுதல் பிரிவுகள் வழக்கில் சோ்க்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







