இஸ்ரேல், பனாமா நாடுகளுக்கான இந்திய தூதர்கள் நியமனம்: மத்திய அரசு உத்தரவு
இஸ்ரேல் மற்றும் பனாமா நாடுகளுக்கான இந்தியாவின் புதிய தூதரர்களை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


புதுதில்லி: இஸ்ரேல் மற்றும் பனாமா நாடுகளுக்கான இந்தியாவின் புதிய தூதரர்களை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கான இந்தியாவின் புதிய தூதராக சஞ்சீவ் குமார் சிங்கலா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பனாமா நாட்டிற்கான இந்தியாவின் புதிய தூதராக உபேந்தர் சிங் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கான இந்தியத் தூதுராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் குமார் சிங்கலா, கடந்த 1997 ஆம் ஆண்டு பிரிவான இந்திய அயலகப் பணித்துறையின் அதிகாரியாக தேர்வானவர். பிரதமரின் தனியார் செயலாளராக பணியாற்றி வந்தார்.
புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் வெகுவிரைவில் பொறுப்பேற்பார் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...