மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தில்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளுக்கு ரெட் அலர்ட்: மக்களே உஷார்!

இந்தியாவின் தலைநகர் தில்லி உட்பட வட இந்திய மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் கடுமையான வெப்பம் பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2019, 7:02 am

IANS


புது தில்லி: இந்தியாவின் தலைநகர் தில்லி உட்பட வட இந்திய மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் கடுமையான வெப்பம் பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் உச்ச பட்ச எச்சரிக்கையான நான்கு நிறத்திலான அறிவுறுத்தல் செய்தியில், இந்தியாவில் பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ஒரு சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

சனிக்கிழமை தில்லி உள்ளிட்ட மேற்கண்ட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் கடுமையான வெப்பம் பதிவாகும் என்றும், 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதே நிலை அடுத்த 5 நாட்களுக்கும் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை 44.8 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவானது. வியாழக்கிழமை முதல் வெப்பம் அதிகரித்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வட இந்திய மாநில மக்கள் மட்டுமல்லாமல், கடுமையான வெயில் நேரத்தில் வெளியே செல்ல வேண்டிய பணியில் இருக்கும் மக்களும் உஷாராக இருக்க வேண்டும், அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.