25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்டுங்க: மோடிக்கு  பாஜக தலைவர் கடிதம் 

அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதி உள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:03 am

DIN

புது தில்லி: அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதி உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று பாஜக இரண்டாவது தடவையாக பதவியேற்றுக் கொண்டது. இதையடுத்து ராமர் கோயில் கட்டுவது தொடர்பான நடவடிக்கைகளை பாஜக மீண்டும் உத்வேகத்துடன் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அயோத்தியில் அரசுக்கு சொந்தமான 67 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்ட பயன்படுத்த வேண்டும்.

அத்துடன் ராம சேது பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பதற்கான பணிகளைத் துவக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.