தெலங்கானாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் டிஆர்எஸ் கட்சியில் இணைய முடிவு
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் வகையில், 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைய உள்ளனர்.


ஹைதராபாத்: தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் வகையில், 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைய உள்ளனர்.
இது குறித்து இன்று தெலங்கானா சட்டப்பேரவை சபாநாயகர் ஸ்ரீனிவாஸ் ரெட்டியை சந்தித்துப் பேசிய 12 எம்எல்ஏக்களும் தங்களது பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் பேரவை உறுப்பினர்கள் என்பதில் இருந்து மாற்றி ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியாக மாற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவையில், கட்சியின் தெலங்கானா மாநிலத் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, நல்கொண்டா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் பலம் 18 ஆகக் குறைந்தது.
தற்போது மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்களும் டிஆர்எஸ் கட்சிக்கு மாறுவதற்கு முடிவு செய்துள்ளனர். இவர்களது கோரிக்கையை சபாநாயகர் ஏற்கும்பட்சத்தில் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்க நேரிடும்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தெலங்கானா பேரவைத் தேர்தலில் டிஆர்எஸ் கட்சி 88 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...