செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

News image
Updated On :7 ஜூன் 2019, 5:49 am

PTI


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

லஸ்ஸிபோரா பகுதியில் உள்ள பஞ்ரன் கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நேற்று முதல் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வந்தது. இதில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்ததும், அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து பதில் தாக்குதல் தரப்பட்டது. இதில் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முன்னதாக பாதுகாப்புக் காரணங்களுக்காக புல்வாமா மாவட்டம் முழுவதும் இணையச் சேவை முடக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.