செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

இந்திய ரயில்வேயின் வரலாற்றில் முதல் முறையாக ஓடும் ரயிலில் மசாஜ் வசதி

இந்திய ரயில்வேயின் வரலாற்றில் முதல் முறையாக ஓடும் ரயிலில், ரயில் பயணிகளுக்கு மசாஜ் வசதி செய்து தர திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :8 ஜூன் 2019, 10:02 am

PTI


புது தில்லி: இந்திய ரயில்வேயின் வரலாற்றில் முதல் முறையாக ஓடும் ரயிலில், ரயில் பயணிகளுக்கு மசாஜ் வசதி செய்து தர திட்டமிட்டுள்ளது.

இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ரயில்வேயின் ரட்லம் மண்டலத்தில் இருந்து இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் வரலாற்றிலேயே இதுபோன்ற சேவை வழங்கப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம் ரயில்வேயின் வருவாய் பெருகுவதோடு, பயணிகளும் அதிகரிப்பார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது. தலை மற்றும் கால்களுக்கு மசாஜ் செய்ய தலா ரூ.100 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேயின் வருவாயைப் பெருக்க புதிய திட்டங்களையும், முன் முயற்சிகளையும் பரிசோதிக்கும் வகையில் இந்த மசாஜ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.