இந்த மாட்டுக்கு என்னவொரு வில்லத்தனம்? குஜராத்தில் இருவர் காயம்!வைரலாகும் விடியோ

குஜராத்தில் ராஜ்கோட் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டு சாலையில்  போவோர் வருவோரை எல்லாம் இடித்துத் தள்ளிய மாடு கோசாலையில் அடைக்கப்பட்டது.
இந்த மாட்டுக்கு என்னவொரு வில்லத்தனம்? குஜராத்தில் இருவர் காயம்!வைரலாகும் விடியோ
Updated on
1 min read

குஜராத்தில் ராஜ்கோட் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டு சாலையில்  போவோர் வருவோரை எல்லாம் இடித்துத் தள்ளிய மாடு கோசாலையில் அடைக்கப்பட்டது.

ஏதோ எதிர்பாராதவிதமாக எதிரே வந்தவர்களை இடித்துத் தள்ளியது என்றால் பரவாயில்லை. ஆனால் இடிப்பதற்கு என்றே கிளம்பி வந்ததுபோல அது செய்யும் பாசாங்குகள் சம்பவப் பகுதியில் இருந்த விடியோவில் தெளிவாக படமாகியுள்ளது.

ஏஎன்ஐ வெளியிட்டிருக்கும் இந்த விடியோவைப் பார்க்கும் போது அடிபட்ட இரண்டு பேரைத் தவிர, இந்த மாட்டுக்கு என்னா ஒரு வில்லத்தனம் என்று வடிவேலு பாணியில் கேட்காமல் இருக்க முடியவில்லை.

ஒரு சைக்கிளில் போன பெரியவரை இடித்துத் தள்ளிவிட்டு, அவரையை கண் கொட்டாமல் பார்ப்பதும், ஒவ்வொருவரையும் இடித்துத் தள்ளிவிட்டு மீண்டும் பழையபடியே ஒன்றும் தெரியாத புள்ளை போல சாலையோரம் போய் நின்று கொள்வதும், அது ஏதோவொரு முடிவோடுதான் வந்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

இடித்துத் தள்ளுவதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் பழையபடி சாலையோரம் பவ்யமாகப் போய் நின்று கொள்வதைத்தான் காலம் கலி காலம் என்று சொல்ல வைக்கிறது. விடியோவைப் பாருங்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com