ஹரியாணா காங்கிரஸ் தலைவர் விகாஸ் சௌதாரி ஃபரிதாபாத்தில் சுட்டுக் கொலை

ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவர் விகாஸ் சௌதாரி ஃபரிதாபாத்தில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹரியாணா காங்கிரஸ் தலைவர் விகாஸ் சௌதாரி ஃபரிதாபாத்தில் சுட்டுக் கொலை
Updated on
1 min read


ஃபரிதாபாத்: ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவர் விகாஸ் சௌதாரி ஃபரிதாபாத்தில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்று காலை தனது காரில் சென்று கொண்டிருந்த விகாஸ் சௌதாரி சுடப்பட்டார். ரத்த வெள்ளத்தில் பாய்ந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அங்கு அவர் மரணம் அடைந்தார்.

சம்பவம் குறித்து மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த சம்பவம் குறித்து அறிந்த ஹரியாணா காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி அஷோக் தன்வார், இந்த மிகக் கொடூரமான சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருப்பதோடு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இங்கு காட்டாட்சி நடைபெறுகிறது. சட்டத்தைப் பார்த்து யாரும் பயப்படவில்லை. நேற்றும் இதேப்போன்றதொரு சம்பவம் நடந்துள்ளது. பாலியல் பலாத்காரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தன்வார் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com