சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

பசுப்பாதுகாப்பு என்று அப்பாவிகளைத் தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை: ம.பி காங்கிரஸ் முடிவு    

பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அப்பாவிகளைத் தாக்குவோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :27 ஜூன் 2019, 3:24 pm

போபால்: பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அப்பாவிகளைத் தாக்குவோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

கடந்தமுறை பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நாடுமுழுவதும் பசுக்களை பாதுகாக்கிறோம்  என்ற பெயரில் அப்பாவி மக்களை குண்டர்கள் கும்பலாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இத்தகைய சம்பவங்களைத் தடுக்க மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதேசமயம் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஒவ்வொரு மாவட்டந்தோறும் சிறப்பு போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென்றும் கூறியிருந்தது.

இந்நிலையில் பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அப்பாவிகளைத் தாக்குவோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில கால்நடைத்துறை அமைச்சர் லகான் சிங் யாதவ் கூறியதாவது:

பசுவதை தடுப்புச்சட்டம் 2004-ல் திருத்தம் கொண்டுவர மத்தியப் பிரதேச மாநில  காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான கோப்புகளில் முதல்வர் கமல்நாத் கையெழுத்திட்டுள்ளார். ஜூலை 8-ம் தேதி தொடங்கும் மத்திய பிரதேச மாநில மழைக்கால கூட்டத் தொடரில் இந்த திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

புதிய சட்டத்திருத்தத்தின்படி, பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அப்பாவிகளைத் தாக்குவோருக்குகுறைந்தபட்சம் 6 மாதம் முதல், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

அவர்கள் கும்பலாக வன்முறையில் ஈடுபட்டால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும். அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தொடர்ந்து இதேபோன்ற வன்முறையில் ஈடுபட்டால், தண்டனை இரட்டிப்பாக்கப்படும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.