இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைப்பதில் தாமதம் என்று தகவல்

இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைப்பதில் தாமதம் என்று தகவல்

சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் முறைப்படி ஒப்படைப்பதில் தாமதம் என்று ஏ.ஏன்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
Published on

வாகா: சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் முறைப்படி ஒப்படைப்பதில் தாமதம் என்று ஏ.ஏன்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார். பின்னர், லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார்.  

இதனிடையே, வாகா எல்லையில் வழக்கமாக நடைபெறும் கொடியிறக்க நிகழ்ச்சி இன்று ரத்து செய்யப்பட்டது. எனினும், அபிநந்தனின் வருகையையொட்டி அங்கு வழக்கம் போல் மக்கள் திரண்டிருந்தனர்.   

இதையடுத்து, அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் என்று முதலில் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் முறைப்படி ஒப்படைப்பதில் தாமதம் என்று ஏ.ஏன்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி இரவு 9 மணிக்கு மேல்தான் அவர் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிய வந்துள்ளது.

அங்கு நடைபெறும் சம்பவங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைசசர் நிர்மலா சீதாராமன் கண்காணித்து வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com