தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: ஸ்ரீநகர் சென்றடைந்த உதவி தேர்தல் ஆணையர் 

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: ஸ்ரீநகர் சென்றடைந்த உதவி தேர்தல் ஆணையர் 

நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, உதவி தேர்தல் ஆணையர் சந்தீப் ஸக்ஸேனா தலைமையிலான உயர் அதிகாரிகள் குழுவினர் ஸ்ரீநகர் சென்றடைந்தனர்.
Published on

ஸ்ரீநகர்: நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, உதவி தேர்தல் ஆணையர் சந்தீப் ஸக்ஸேனா தலைமையிலான உயர் அதிகாரிகள் குழுவினர் ஸ்ரீநகர் சென்றடைந்தனர்.

இரண்டு நாள் பயணமாகச் செல்லும் அந்தக் குழுவானது, மாநில நிர்வாக அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருடன் ஸ்ரீநகரில் திங்கள்கிழமையும், ஜம்முவில் செவ்வாய்க்கிழமையும் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளது.

ஸ்ரீநகர் கூட்டத்தில் ஏழு தேசிய கட்சிகள் மற்றும் மூன்று பிராந்திய கட்சி பிரதிநிதிகளுடன் ஆணையம் திங்களன்று ஆலோசனை நடத்துகிறது.  

அதேபோல புல்வாமா தாக்குதலையடுத்து மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு சூழல் மற்றும்  லடாக் பிராந்தியத்தின் இரண்டு மாவட்டங்களின் நிலைகுறித்து விரிவான ஆலோசனை நடத்த  உள்ளனர்.

இந்த மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து பேரவைத் தேர்தலையும் நடத்துவதற்கு மத்திய அரசு விரும்புவதால், அதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

செவ்வாயன்று தில்லிக்கு திரும்புவதற்கு முன்னால் தேர்தல் ஆணையக் குழுவினர் ஜம்முவில் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com