காஷ்மீர் சகோதரர்களைத் தாக்கினால் நடவடிக்கை எடுங்கள்: மாநில அரசுகளுக்கு மோடி வேண்டுகோள்

காஷ்மீர் சகோதரர்களைத் யாரவது தாக்கினால் நடவடிக்கை எடுங்கள் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஷ்மீர் சகோதரர்களைத் தாக்கினால் நடவடிக்கை எடுங்கள்: மாநில அரசுகளுக்கு மோடி வேண்டுகோள்

புது தில்லி: காஷ்மீர் சகோதரர்களைத் யாரவது தாக்கினால் நடவடிக்கை எடுங்கள் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வியாழனன்று உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் காஷ்மீரைச் சேர்ந்த மூன்று வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், காஷ்மீரிகளை மிகக் கொடூரமாக தாக்கியதாக தெரிவித்தனர். 

அவர்களை கல் எறிபவர்கள் என்று அழைத்தும், ஆதார் அட்டையை காண்பியுங்கள் என்றும் துன்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தை அருகில் இருந்த யாரும் தடுத்து நிறுத்தவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த யாரோ போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் வந்த பிறகே அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். போலீஸார் வருவதற்குள் இரண்டு காஷ்மீரி வியாபாரிகள் தப்பித்து ஓடினர். அப்சல் என்பவர் மட்டும் அந்த இடத்தில் இருந்தார். 

இதையடுத்து, அவர் உள்ளூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டார். ஆனால், முதலில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அதன்பிறகு, தாக்குதல் நடத்தப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன பிறகே குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த சம்பவத்துக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர்  தாக்குதல் நடத்திய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்று மாநில டிஜிபி ஆனந்த் குமார் மற்றும் கூடுதல் டிஜிபி ராஜீவ் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். 

இந்நிலையில் காஷ்மீர் சகோதரர்களைத் யாரவது தாக்கினால் நடவடிக்கை எடுங்கள் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

லக்னௌவில் காஷ்மீர் சகோதரர்களை தாக்கியவர்கள் மீது உ.பி. அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது; இது போன்று சம்பவம் நடந்தால் எல்லா மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com